திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் திருடியவர் கைது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 1:20 AM IST (Updated: 10 Feb 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் திருடியவர் கைது சென்னையை சேர்ந்தவர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஏராளமான உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் சண்முகவிலாச மண்டபம் முன்பு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் கையை விட்டு பணம் திருடி கொண்டிருந்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் பாதுகாவலர்கள் பார்த்துள்ளனர். உடனே விரைந்து சென்று உண்டியலில் திருடியவரை கையும் களவுமாக பிடித்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சொர்ணத்திடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர் சென்னை சைதாப்பேட்டை விசாலினி கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (வயது 45) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை திருச்செந்தூர் கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் அவர் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர். திருடிய ரூ.2 ஆயிரத்து 400-ம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story