வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 பேருக்கு அனுமதி: வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நேற்று வேட்பாளர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.90 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது. செலவீன கணக்குகளை தேர்தல் முடிந்த 30 நாட்களில் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களோ, அவரது முகவர்களோ, கட்சி தொண்டர்களோ உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது.
இரவு 8 மணி வரை பிரசாரம்
இதைப்போல் ரூ.10 ஆயிரத்துக்கும் மதிப்பிற்கு அதிகமாகவும் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. வீடு வீடாக வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது 20 பேருக்கு மேல் கூட்டம் இருக்க கூடாது. பிரசாரத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்புகளை பயன்படுத்தலாம்.
அரங்கத்தின் மொத்த இருக்கையில் 50 சதவீதம் பேர் கொண்டும், பொது வெளியில் 30 சதவீதம் பேர் கொண்டும் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். பிரசார கூட்டம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும்.
136 இடங்கள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 136 இடங்கள் திறந்த வெளி பொதுக்கூட்டம் நடத்த பகுதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/public-meeting-location/என்ற இணையதளத்தில் வேட்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாகனங்களின் விவரங்களை உதவி தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். வேட்பாளர் அல்லது முகவர்களுக்கு ஒரு வாகனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகள்
தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா விதிமுறைகளை வேட்பாளர் மற்றும் அவருடன் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்கள் அச்சிடப்பட்ட அறிவிப்புகளை வழங்கும்போது கட்டாயம் முககவசம் மற்றும் கையுறை அணியவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், அங்கீகரிக்கப்படாத கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரடியாக பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story