திருச்சி - நாகை இடையே முன்பதிவில்லா விரைவு ரெயில் சேவை தொடங்கியது
திருச்சி - நாகை இடையே முன்பதிவில்லா விரைவு ரெயில் சேவை தொடங்கியது.
திருச்சி,
திருச்சியில் இருந்து நாகைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா முதல் அலையின் போது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அப்போது, இந்த ரெயிலும் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுநல அமைப்புகளும், பயணிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த ரெயில் நேற்று முதல் திருச்சி-நாகை சிறப்பு விரைவு ரெயிலாக மீண்டும் இயங்கத்தொடங்கியது.
நாகையில் காலை 7.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில், காலை 11.25 மணிக்கு திருச்சிக்கு வந்தடைந்தது. பின்னர் மாலையில் 4.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இரவு 8.20 மணிக்கு நாகையை சென்றடைந்தது. இதுபோல் இந்த ரெயில் தினமும் இயக்கப்படும்.
அந்தணப்பேட்டை, சிக்கல், கீழ்வேளூர், கூத்தூர், அடியக்காமங்கலம், திருவாரூர், குளிக்கரை, திருமதிக்குன்னம், கொரடாச்சேரி, நீடாமங்கலம், கோவில்வெண்ணி, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், குடிகாடு, தஞ்சை, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி, தொண்டாம்பட்டி, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என்று ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல மாதங்களுக்கு பின்னர் காலை மற்றும் மாலை நேரத்தில் திருச்சி-நாகை இடையே ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story