நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணிக்க 3 குழுக்கள் அமைப்பு - அரசாணை வெளியீடு


நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணிக்க 3 குழுக்கள் அமைப்பு - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 10 Feb 2022 4:34 PM IST (Updated: 10 Feb 2022 4:34 PM IST)
t-max-icont-min-icon

நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்காணிப்பு குழுக்களுக்கான அரசாணையை வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 3 குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த குழுவில் வருவாய்த்துறை செயலாளர், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மண்டல அளவிலான முதல் கண்காணிப்பு குழுவின் தலைவராக வருவாய் கோட்டாட்சியர் இருப்பார் என்றும் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் முதல் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட 2-வது கண்காணிப்பு குழுவின் மாவட்ட எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், பஞ்சாயத்து அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணிக்க திருத்தி அமைக்கப்பட்ட 3-வது குழுவின் தலைவராக தலைமைச் செயலாளர் செயல்படுவார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story