முதுகலை பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் அதிகரிப்பு


முதுகலை பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 4:58 PM IST (Updated: 10 Feb 2022 4:58 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை பொறியியல் படிப்புகளில் தொடர்ந்து காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை,

நடப்பு கல்வியாண்டில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த 3,073 மாணவர்களில் 1,659 மாணவர்கள் மட்டுமே முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதனால் மொத்தம் உள்ள 10,000 இடங்களில் காலி இடங்களின் எண்ணிக்கை 8,347 ஆக உள்ளது.

இந்த ஆண்டு 15 சதவீத மாணவர்கள் மட்டுமே முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு 3,770 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,106 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். இதனால் கடந்த ஆண்டு காலி இடங்களின் எண்ணிக்கை 7,294 ஆக இருந்தது. 

அதே வேளையில் கொரோனா காலகட்டத்திற்கு முன் 10,000 இடங்களில் 6,148 காலி இடங்கள் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பணிக்கு செல்ல விரும்புவோர் மட்டுமே முதுநிலை பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதன் காரணமாக முதுகலை படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசியர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story