“ஒரு காலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாற முடியாது” - கே.எஸ்.அழகிரி பேட்டி


“ஒரு காலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாற முடியாது” - கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2022 5:39 AM IST (Updated: 11 Feb 2022 5:39 AM IST)
t-max-icont-min-icon

“ஒருகாலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாறமுடியாது” என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

நெல்லை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரசாரம் செய்தார். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேசத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சுதந்திர போராட்டத்தில் பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கலந்து கொண்டதே கிடையாது. ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம் அல்லது ஒரு நிமிடம் கூட சுதந்திர போராட்டத்திற்காக கலந்து கொண்டு சிறை சென்றது கிடையாது. மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதை அவர்கள் நியாயப்படுத்த கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள். மாலை அணிவிக்கிறார்கள்.

இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று விரும்புகிறவர்கள். ஆனால் பா.ஜனதா கட்சியினர் பழமைவாதிகளாக இருக்கிறார்கள். மீண்டும் இந்திய சமுதாயத்தின் சக்கரத்தை பழைய காலத்திற்கு திருப்பிக் கொண்டு செல்ல நினைக்கிறார்கள். அது மிகவும் தவறானது. ஒரு காலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாற முடியாது. வேண்டுமென்றால் காவிக்கொடி கலவர கொடியாக மாறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story