நீட் விவகாரம்: விவாதத்துக்கு தயார் - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
நீட் விவகாரத்தில் முதல் -அமைச்சர் அறிவிக்கும் பொதுவான இடத்தில் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நீட் தேர்வு குறித்து முதல்-அமைச்சருடன் விவாதிக்க தயார். முதல்-அமைச்சர் அறிவிக்கும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்ய தயாராக உள்ளோம்.நீதிபதியாக இருந்து மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.
நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து இருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story