காரைக்குடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்தவர் கைது
காரைக்குடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகரை சேர்ந்தவர் சோம கணேசன் (வயது35). இவர் கேப் ஸ்டாக்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பணத்தை சேமித்து வத்திருந்தனர்.
இந்த நிலையில் சோம கணேசன் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி உள்ளதாக காரைக்குடியை சேர்ந்த சரவணன் என்பவர் காரைக்குடி வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோம கணேசனை தேடிவந்தனர்.
பின்னர இது தொடர்பாக அவரது மனைவி வள்ளியம்மையிடம் போலீசார் விசாரணை நடத்திடத்தினர். அப்போது தனது கணவரை பல நாட்களாக காணவில்லை. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளதாக தெரிவித்தார்.
போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று கோர்ட்டில் சோம கணேசன் ஆஜரானார்.
பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவரை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து காரைக்குடி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கணேசன் கைது செய்யப்பட்டதை அறிந்த பலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் பணத்தை மீட்டு தருவதாக போலீசார் உத்தரவு அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story