கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2022 11:21 AM IST (Updated: 11 Feb 2022 11:21 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா தனது பணி காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆணையம் சூரப்பாக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்தபோது அதில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தது. ஊழியர்கள் உட்பட பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த சூழலில் ஆணையத்தின் விசாரணை எதிர்த்து சூரப்பா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.  விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அத்துடன் நீதிபதி நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையின் நகலை  வழங்க சூரப்பா கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அரசு தரப்பில் விசாரணை அறிக்கையில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்றும் அதை சூரப்பாவிற்கு தர இயலாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் அறிக்கையை வேந்தர் முடிவு எடுப்பதற்கு முன்பாக அறிக்கையை வழங்கினால் தான் சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு அளிக்க முடியும் என்று நீதிபதி பார்த்திபன்  கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கில் நீதிபதி பார்த்திபன் இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேந்தராகிய ஆளுநருக்கு அனுப்பும் முன் அறிக்கையை சூரப்பாவுக்கும் வழங்க வேண்டும் என நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை அறிக்கை மீதான விளக்கத்தை சூரப்பா 4 வாரங்களில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார். கலையரசன் ஆணையை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ஏற்கனவே தாக்கலான நிலையில் நகலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story