மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை


மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2022 1:02 PM IST (Updated: 11 Feb 2022 1:02 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு,

பெருந்துறை சுள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரஞ்சித் குமார் (வயது 31). தனது குழந்தை பிறந்த நாளை முன்னிட்டு ரஞ்சித்தின் நண்பர்கள் பிரகதீஷ் மற்றும் சக்திவேலும் ரஞ்சித் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.  

3 பேரும் வீட்டின் மேல் மாடியில் உள்ள வரண்டாவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரகதீஷ் கை எதிர்பாராதவிதமாக மின்கம்பிகள் பட்டு மின்சாரம் தாக்கியது. 

இதைப்பார்த்த ரஞ்சித்குமார் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் எதிர்பாரத விதமாக ரஞ்சித்தின் மீதும் மின்சாரம் பாய்ந்து இரண்டு பேரையும் தூக்கி வீசியது. 

சத்தம் கேட்டு ஓடிவந்த ரஞ்சித்தின் மனைவி சந்தியா மற்றும் சக்திவேல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுதொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story