டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...


டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
x
தினத்தந்தி 11 Feb 2022 1:18 PM IST (Updated: 11 Feb 2022 1:18 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தென் தமிழகம், டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளைய டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

12-ந் தேதி மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை பெய்யக்கூடும். 13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story