வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்


வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்
x
தினத்தந்தி 11 Feb 2022 3:53 PM IST (Updated: 11 Feb 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

அரசின் சிறந்த நிர்வாக கட்டமைப்பு காரணமாக வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளாதாக நிதிஆயோக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நிதி ஆயோக் மற்றும் கொள்கை வளர்ச்சி திட்ட குழுவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்தியதன் மூலம் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் இலக்கை எட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு 86 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பரப்பளவு மற்றும் இயற்கை வளங்களை அதிகம் கொண்டுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் 3 மதிப்பெண்கள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் நிர்வாக கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும், இதன் காரணமாக, வளர்சித் திட்டங்கள் சரியான பயனாளிகளை விரைவாக சென்றடைவதாகவும் கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவருமான விஜயானந்த் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில், இந்திய அளவில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story