நினைவுநாளையொட்டி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சிங்காரவேலரின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி
சிங்காரவேலரின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ரங்கசாமி மாலை
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை-கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமரன், சண்.குமாரவேல், கலியபெருமாள், சுந்தரி அல்லிமுத்து, அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஜே.பி.எஸ்.சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், டாக்டர் நித்திஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிசேகம், கீதநாதன், சேதுசெல்வம், சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகத்தினர் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் பல்வேறு மீனவ பஞ்சாயத்தார், சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காரைக்கால்
காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், பத்மஸ்ரீ கேசவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மீனவர்கள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
Related Tags :
Next Story