புதுவையில் 149 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் பலியானார்.
புதுச்சேரி
புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் பலியானார்.
149 பேருக்கு தொற்று
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 149 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 56 பேர், வீடுகளில் 1,937 பேர் என 1,993 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 661 பேர் குணமடைந்தனர்.
இதனிடையே புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெரிய காலாப்பட்டை சேர்ந்த 52 வயது ஆண் பலியானார். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,957 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி
புதுவையில் தொற்று பரவல் 6.26 சதவீதமாகவும், குணமடைவது 97.61 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 268 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 688 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 320 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 52 ஆயிரத்து 190 டோஸ் தடுப் பூசிகள் போடப்பட் டுள்ளது.
===
Related Tags :
Next Story