காரைக்காலில் 2 மணி நேரம் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


காரைக்காலில் 2 மணி நேரம் பலத்த மழை   பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Feb 2022 2:58 PM (Updated: 11 Feb 2022 2:58 PM)
t-max-icont-min-icon

காரைக்காலில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்கால்
காரைக்காலில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை

மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவை, காரைக்காலில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து   இருந்தது. இந்த நிலையில் காரைக்காலில் நேற்று  இரவு முதல் மழை தூறிக் கொண்டே இருந்தது.  பின்னர்  இன்று அதிகாலை கனமழையாக உருவெடுத்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
மழை காரணமாக காமராஜர் சாலை, பி.கே.சாலை, கென்னடியார் வீதி, பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. தண்ணீரில் மிதந்தபடியே வாகனங்கள் சென்றன. திடீர் மழை காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி-செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். காரைக்காலில்  இன்று  மாலை 3 மணி வரை 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில்  இன்று  காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீர் மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
====

Next Story