பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது


பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 6:54 AM IST (Updated: 12 Feb 2022 6:54 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வகுப்பறைக்கு வந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மலையப்ப நகரில் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சின்னதுரை (42).  மது அருந்தும் பழக்கம் உள்ள அவர் பள்ளியில் வகுப்பிற்க்குள் மது அருந்தி வந்து மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து மாணவிகள் மதிய இடைவேளையில் தங்களுடைய பெற்றோர்களிடம் எடுத்துக் கூறவே பெற்றோர்கள் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சின்னதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

Next Story