டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம்


டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம்
x
தினத்தந்தி 12 Feb 2022 8:57 AM IST (Updated: 12 Feb 2022 8:57 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியை வகித்து வந்த ஜக்மோகன் சிங் ராஜூ, பஞ்சாப் மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். இதனால் அந்த இடம் காலியாக இருந்தது.

இதையடுத்து ஜக்மோகன் சிங் ராஜூ இருந்த இடத்துக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு  தெரிவித்துள்ளார். 

Next Story