சீட்டு நடத்தி ரூ 8 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
சீட்டு நடத்தி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீட்டு நடத்தி...
புதுவை லாஸ்பேட்டை சாந்திநகர் சிவாஜி வீதியை சேர்ந்தவர் சுப்பையா. தனியார் ஊழியர். இவர் கல்லூரி சாலையில் வசிக்கும் ராஜகுரு, அவரது மனைவி கல்விக்கரசி ஆகியோரிடம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீட்டு கட்டி வந்தார்.
சீட்டு எடுத்த நிலையில் அதற்கான பணத்தை தருமாறு சுப்பையா அவர்களிடம் கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
ரூ.8 லட்சம் மோசடி
இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் தம்பதியினர் சேர்ந்து, சுப்பையாவை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சீட்டு நடத்தி பணத்தை மோசடி செய்துவிட்டதாக சுப்பையா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் ராஜகுரு, அவரது மனைவி கல்விக்கரசி ஆகியோர் மீது ரூ.8 லட்சத்தை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
------
Related Tags :
Next Story