கோவையில் ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்
கோவை ஊர்க்காவல் படை பிரிவில் 3 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கோவை,
கோவை மாவட்ட (ஊரக) காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநகரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் காலியாக உள்ள 110 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் 15 திருநங்கைகள் கலந்து கொண்ட நிலையில் பி.வருணஸ்ரீ (21), எஸ்.மஞ்சு (29), சுஜித்ரா பன்னீர்செல்வம் (27) ஆகியோர் தேர்வாகினர். இவர்களுக்கு 45 நாட்களுக்கான பயிற்சி முடிந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 12) பணியில் சேர்ந்தனர் என்று கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் பகுதி தளபதி பாலாஜி ராஜு கூறினார்.
தற்போது கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 332 ஆண்கள், 52 பெண்கள், 3 திருநங்கைகள் என 387 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
Related Tags :
Next Story