சென்னை அண்ணா சாலையில் கார் ரேஸ் - சூப்பர் மார்கெட்டிற்குள் புகுந்து விபத்து
சென்னை அண்ணா சாலையில் நடந்த கார் ரேசின் போது ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் நடக்கும் கார் ரேசை தடுப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் நடந்த கார் ரேஸின் போது கட்டுப்பாடை இழந்த கார் சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்தது விபத்துக்கு உள்ளாகி உள்ளது
தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இதில் சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சூப்பர் மார்கெட்டில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு காரில் இருந்தவர்கள் அருகே இருந்த மற்றொரு காரில் தப்பித்து சென்று விட்டனர். கார் சூப்பர் மார்கெட்டில் மோதியதில் அங்க இருந்த உரிமையாளர் காயம் அடைந்தள்ளார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம அடைந்தவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
கார் ரேஸால் ஏற்பட்ட விபத்து - மின்னல் வேகத்தில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த கார்#Chennai#CarRacehttps://t.co/jbRao2ZOTX
— Thanthi TV (@ThanthiTV) February 14, 2022
Related Tags :
Next Story