விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தேர்தல் ரத்து
திமுக சார்பில் போட்டியிட்ட கனி (எ) முத்தையா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிய 4 நாட்கள் உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். வேட்பாளர்களும் வீடு வீடாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
விருதுநகரிலுள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியின் 2-வது வார்டில் திமுக சார்பில் முத்தையா என்பவர் போட்டியிடுகிறார். வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், முத்தையா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திமுக வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story