காதல் ஜோடிகள் வாங்கி சென்ற சாக்லெட் பூங்கொத்து
காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சாக்லெட் பூங்கொத்து தயார் செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் காதல் ஜோடிகள் வாங்கி சென்றனர்.
காதலர் தினத்தையொட்டி புதுச்சேரிக்கு வந்திருந்த காதல் ஜோடிகள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர். காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் புதுவை மிஷன் வீதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சாக்லெட் பூங்கொத்து தயார் செய்யப்பட்டது.
இதனை ஆர்வமுடன் காதல் ஜோடிகள் வாங்கி சென்றனர். சுமார் 300 கிராம் எடை முதல் 1 கிலோ எடை வரையில் இந்த பூங்கொத்து வடிவ சாக்லெட்டுகள் தயார் செய்யப்பட்டன. இது ரூ.450 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாயின. இந்த பூங்கொத்துகளை தயாரிக்க 2 மணிநேரம் வரை ஆனதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
===
Related Tags :
Next Story