புதுவையில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுவையில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரி
புதுவையில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் வந்துள்ளது. இந்தநிலையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 874 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதியானது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 41 பேர், வீடுகளில் 988 பேர் என 1,029 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 319 பேர் குணமடைந்தனர். இதனிடையே ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த 71 வயது முதியவர் பலியானார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,958 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 5.95 சதவீதமாகவும், குணமடைவது 98.19 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 65 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 203 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 48 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 56 ஆயிரத்து 347 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
----===
Related Tags :
Next Story