தி மு க பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக 3 பேர் கைது


தி மு க  பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2022 9:58 PM IST (Updated: 14 Feb 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிக்காத குண்டும் கைப்பற்றப்பட்டது.

புதுச்சேரி
தி.மு.க. பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிக்காத குண்டும் கைப்பற்றப்பட்டது.

வெடிகுண்டு வீச்சு

புதுவை நேதாஜி நகர் ரங்கநாதன் வீதியை சேர்ந்த பொதுப்பணித்துறை காண்டிராக்டரும், தி.மு.க. பிரமுகருமான பிராங்க்ளின் என்பவர் வீட்டில் கடந்த 11-ந்தேதி வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த துணிகர சம்பவத்தில் அவரது உறவினரான விக்னேஷ் என்ற சதீஷ் என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வெடிகுண்டு வீசப்பட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொலை திட்டம்

கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவேதா சுகந்தன் உத்தரவின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோரை கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது. மேலும் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக சதீஷ் மற்றும் முதலியார்பேட்டையை சேர்ந்த அன்பரசன், ரோனோ ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மலேசியா செல்வதற்காக பிராங்க்ளினிடம் சதீஷ் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுக்கவே வெடிகுண்டு வீசி பிராங்க்ளினை கொலை செய்ய சதீஷ் திட்டமிட்டுள்ளார்.

3 பேர் கைது

அதன்படி கடந்த 8-ந்தேதி தனது நண்பர்களான அன்பரசன், ரோனோ மற்றும் மணிகண்டன் ஆகியோரும் சதீசும் சேர்ந்து பட்டாசுகளை வாங்கி அதில் இருந்த வெடிமருந்தை சேகரித்து ஆணி, கூழாங்கற்கள் ஆகியவற்றை கொண்டு நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துள்ளார். அதைத்தான் பிராங்க்ளின் வீடு மீது சதீஷ் வீசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சதீஷ், அன்பரசன், ரோனோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு வெடிகுண்டை சதீஷ் தனது பாட்டி வீட்டில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
--------===

Next Story