மலேசிய பெண் எம் எல் ஏ வுக்கு ஆபாச பதிவுகளை அனுப்பிய மர்ம நபர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் புகார்


மலேசிய பெண் எம் எல் ஏ வுக்கு ஆபாச பதிவுகளை அனுப்பிய மர்ம நபர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் புகார்
x
தினத்தந்தி 14 Feb 2022 10:45 PM IST (Updated: 14 Feb 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

மலேசிய நாட்டு பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச பதிவுகளை அனுப்பியவர் மீது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி
மலேசிய நாட்டு பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச பதிவுகளை அனுப்பியவர் மீது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மிரட்டல்

மலேசிய நாட்டின் பகாங் மாநிலம் சபாய் தொகுதி பெண் எம்.எல்.ஏ. தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியா வாழ் தமிழரான இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் அறிமுகமாகி உள்ளார்.
அந்த நபர் பெண் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். மேலும் முகநூல் மெசேஞ்சர் மூலம் எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து அவர் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.
இதை கவனித்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆபாச பதிவுகளை வெளியிட்ட நபரை முகநூல் மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தனது முகநூல் பக்கத்தை பிளாக் செய்துள்ளார். மேலும் தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழச்சி காமாட்சி துரைராஜூ எம்.எல்.ஏ. அந்த மர்ம நபர் பதிவிட்ட முகநூல் பதிவுகள் மற்றும் ஆடியோ பதிவுடன் புகார் ஒன்றை கவர்னர் தமிழிசை சவுந்தராஜனுக்கு அனுப்பினார்.

வளர விடக்கூடாது

அந்த ஆடியோ புகாரில், எனக்கு முகநூல் பக்கத்தில் தொடர்ந்து ஒருவர் அனுப்பும் பதிவுகளை பார்க்கும்போது, அந்த நபர் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிகிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள நண்பர்களிடம் பேசியபோது உங்களுடைய எண்களை எனக்கு கொடுத்தனர். அந்த மர்ம நபர் புதுச்சேரியை சேர்ந்தவர்.
அவரது பதிவுகளை பார்க்கும்போது ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் போல் தெரிகிறது. இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு எம்.எல்.ஏ.வான எனக்கே இதுபோன்ற நிலை என்றால் அவரது ஊரில் என்ன செய்வார்? என்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை.
இதனை வளரவிடக்கூடாது. உங்களைபோன்ற, என்னை போன்ற பெண்கள் இதுபோன்ற இடங்களில் கால்பதிக்க முடிகிறது என்றால், அதற்காக நாம் கடந்து வந்திருக்கின்ற இன்னல்கள் எளிமையாக இருக்காது என்பது உங்களுக்கு தெரியும். இதனை கருத்தில்கொண்டு அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story