7 மாத சம்பளம் வழங்கக்கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் ஊழியர்கள் முற்றுகை


7 மாத சம்பளம் வழங்கக்கோரி  சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Feb 2022 10:56 PM IST (Updated: 14 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

7 மாத சம்பளம் வழங்கக்கோரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி
7 மாத சம்பளம் வழங்கக்கோரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 7 மாத சம்பளத்தை வழங்கவேண்டும், வருவாயை வீண் செலவு செய்து வரும் நிர்வாகிகளை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை கடற்கரை சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

அதிகாரி உறுதி

இந்த போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் கஜபதி, முகுந்தன், ஆதிகணேசன், கந்தன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ஜார்ஜ் மாறம் போராட்டம் நடத்திய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள்   போராட்டத்தை கைவிட்டு    அங்கிருந்து கலைந்துசென்றனர்.
===

Next Story