எல்.ஐ.சி.பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,
"எல்.ஐ.சி. நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார் மயத்தை நோக்கிய - முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும்.
இம்முடிவு மக்களின் நலனையோ எல்.ஐ.சி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று என்பது வெள்ளிடைமலை. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக் கூடாது.
முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்று எல்.ஐ.சி. நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
LIC over the years has catered to the needs of crores of Indians, earned their trust and has provided social security with its efficient functioning. (1/3) pic.twitter.com/bctqaaY7CP
— M.K.Stalin (@mkstalin) February 14, 2022
Related Tags :
Next Story