ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு


ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 11:29 PM IST (Updated: 14 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட  பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை முதல் நடைபெறவிருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

Next Story