காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகில் தீ


காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகில் தீ
x
தினத்தந்தி 15 Feb 2022 12:06 AM IST (Updated: 15 Feb 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகு தீப்பற்றி எரிந்ததை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

காரைக்கால்   மீன்பிடி  துறைமுகத்தில் விசைப் படகு தீப்பற்றி எரிந்ததை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
மீன்பிடி துறைமுகம்
காரைக்கால் கருக்களாச்சேரியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. காரைக்கால் மாவட்ட கடலோர கிராமங்களின் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை இங்கு தான் நிறுத்தி,   மீன்பிடி  தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 
இங்கு   புதிதாக   படகு கட்டும் தளமும் உள்ளது. அந்த இடத்தில் மீனவர்கள் புதிய படகுகளை கட்டுவது, பழைய படகுகளை பிரித்து ஏலமும் விடுவார்கள். 
கொழுந்து விட்டு எரிந்த படகு
அதேபோல் கருக்களாச்சேரி மீன் பிடித்துறைமுகத்தில் பழுதான படகு ஒன்றை பிரித்து அகற்றும் பணி நடந்தது. கடந்த 2 நாட்களாக நடந்து வந்த பணியில் படகின் எந்திரப்பகுதி ஏற்கனவே அகற்றப்பட்டது. நேற்று படகில்    இருந்த  இரும்பு பட்டைகள், தகடுகள் குழாய்களை வெட்டி எடுக்கும் பணி நடந்தது.
இதற்காக தொழிலாளர்கள் கியாஸ் வெல்டிங் மூலம் அவற்றை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெல்டிங் பகுதியில் இருந்து வெளியேறிய தீப்பொறி மரப்பகுதியில் பட்டு தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால்     அந்த   பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
300 படகுகள் தப்பின
இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.   இருப்பினும்  படகு முற்றிலும் எரிந்து நாசமானது. 
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட படகுகள் தப்பின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story