இரவில் தாயை கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைய விடியும் வரை காத்திருந்த வாலிபர்...! - காரணம் என்ன?
குடும்பத்தகராறில் இரவில் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, விடியும் வரை காத்திருந்து போலீசில் வாலிபர் சரண் அடைந்தார்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னிசேரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கையரசு. இவரது மனைவி அமுதா, மகன்கள் உதயகுமார் (வயது 26), முனியசாமி. மங்கையரசு வெளியூரில் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருகிறார்.
இந்தநிலையில் மூத்த மகன் உதயகுமாருக்கும் தாய்அமுதாவுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2-வது மகன் முனியசாமி வீட்டில் இல்லை. உதயகுமார், அவரது தாய் அமுதா ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். தாய்,மகன் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்ேபாது ஆத்திரம் அடைந்த உதயகுமார், பெற்ற தாய் என்றும் பாராமல் அமுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் விடியும் வரை வீட்டிலேயே இருந்துவிட்டு நேற்று காலை உதயகுமார் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறிஉள்ளார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story