இன்று முதல் நடக்கவிருந்த ஆசிரியர்கள் பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு
இன்று முதல் நடக்கவிருந்த ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021-22- ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை கடந்த 28.1.2022 தேதியன்று வெளியிடப்பட்டது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அரசு, நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 15-ந்தேதி (இன்று) முதல் நடக்கவிருந்த பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story