கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மூலம் ரூ.88 கோடி வாடகை வசூலிப்பு


கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மூலம் ரூ.88 கோடி வாடகை வசூலிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 9:04 AM IST (Updated: 15 Feb 2022 12:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள் மூலம் ரூ.88 கோடி வாடகை வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மூலம் வசூலிக்கப்பட்ட வாடகை தொகை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள் மூலம் இதுவரை 88 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கோவை மாவட்டம் அனுப்பர்பாளையம் பிள்ளையார், மாரியம்மன் கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கடைகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 770 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலுக்குச் சொந்தமான கடை வாடகைதாரர்களிடம் இருந்து 95 ஆயிரத்து 526 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறாக தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நிலுவையில் உள்ள வாடைகை, குத்தகை என இதுவரை 88 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வாடகை மற்றும் குத்தகை தொகையை செலுத்தி கோவிலுக்கு வருவாய் பெருக்குவதன் மூலம் திருப்பணி மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story