எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..! திருமண விழாவில் குவார்ட்டர்-சிக்கன் வழங்கிய நண்பர்கள் ...!
ஆதார் கார்டு காட்டினால் திருமணவிழாவில் குவார்ட்டரும் சிக்கனும் இலவசம் சிவகங்கை திருமணவிழாவில் ருசிகரம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் கொடுப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்தது மட்டும் அல்லாமல் சொன்னபடி அதனை கொடுத்தும் விருந்தினர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளனர் மாப்பிள்ளை தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர்.
சிவகங்கை அருகே கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து ,சரண்யா, ஆகியோர் திருமண வரவேற்பு பிளக்ஸ் போர்டில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தனர்.
அதில் சில நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது. அதில் திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும் ,திருமணம் ஆகதாவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து விருந்தினர்களை குஷி படுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story