வேலுர் சிறையில் விசாரணை கைதி பலி


வேலுர் சிறையில் விசாரணை கைதி பலி
x
தினத்தந்தி 15 Feb 2022 11:20 AM IST (Updated: 15 Feb 2022 11:20 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கணவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

வேலூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி( 26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையேயான சண்டையில் மனமுடைந்த நந்தினி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.  

நந்தினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் ராஜா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். நேற்றிரவு ராஜமணியை கைது செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ராஜமணியை15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜாமணி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலையில் வேலூர் சிறையில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு சிறை மருத்துவர்கள் முதலுதவி அளித்து உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார். ராஜா மணிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்ததும் இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்தபோது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story