புதுவையில் இன்று 68 பேருக்கு கொரோனா
புதிதாக 68 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் அதிகம்
புதுச்சேரி
புதுவையில் கடந்த மாதம் கொரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையும் சுமார் 20 ஆயிரம் வரை இருந்தது.
அரசின் நடவடிக்கை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது 900 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,971 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 68 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 35 பேர், வீடுகளில் 865 பேர் என 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று 196 பேர் குணமடைந்தனர். அதேநேரத்தில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டியார்பாளையம் லூயிஸ் தோட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி பலியானார். புதுவையில் தொற்று பரவல் 3.45 சதவீதமாகவும், குணமடைவது 98.27 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 299 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 827 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 242 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 57 ஆயிரத்து 738 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
--- --- ----====
Related Tags :
Next Story