முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு கணவர் விவாகரத்து நோட்டீஸ்
ராஜ்யசபா முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு அவரது கணவர் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
ராஜ்யசபா முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு அவரது கணவர் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா, கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக வழக்கறிஞர் ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ராமசாமி விவாகரத்து கேட்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சசிகலா புஷ்பா பலமுறை தகராறில் ஈடுபட்டதகாவும் இது தொடர்பாக டெல்லி, மதுரை, தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story