வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - தமிழக அரசு
50% ஆசிரியர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு சென்றதால் அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால், அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்.19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story