குடியாத்தம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல்
குடியாத்தம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குடியாத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திராவிலிருந்து வந்த ஒரு காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அந்த காரில் இருந்தவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story