மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 5:07 AM IST (Updated: 17 Feb 2022 5:07 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (56). இவர் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அங்கு கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் ஆசிரியர் ஜெயராமன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகள் பேசுவது, பாலியல் ஆசையை தூண்டுவது போல் நடந்து கொள்வது, மாணவிகளை சீண்டுவது என்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் குழந்தைகள் உதவி எண் 
1098
 க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் நேரில் சென்று விசாரணை செய்து உறுதி செய்யப்பட்ட பின் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்தனர். 

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆசிரியர் ஜெயராமன் சிறையில் அடைக்கப்பட்டார். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மாணவிகளிடம் பால் உணர்ச்சியை தூண்டுவது, சில்மிஷ வேலைகளில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story