11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அழகர் கோவில் தெப்பத் திருவிழா


11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அழகர் கோவில் தெப்பத் திருவிழா
x
தினத்தந்தி 17 Feb 2022 6:29 AM IST (Updated: 17 Feb 2022 6:32 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் கோவில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை,

மாசி மகத்தையொட்டி மதுரை மாவட்டம் அழகர் கோவில் தெப்பத்திருவிழா பொய்கைகரைபட்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழா 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பெரும்பாலான மக்கள்
கலந்துகொண்டனர்.  தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் அன்ன வடிவில் செய்து வைத்த தெப்பத்தில் சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளி மைய மண்டபத்தை சுற்றி வந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story