ரூ 38 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரங்கள் மாயம்
காரைக்குடியில் செல்போன் டவர் திருடு போனதாக புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி,
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அகிலன் .இவர் செல்போன் கோபுரங்கள் நிறுவும் தனியார் கம்பெனியின் செயற்பொறியாளர். இவர் காரைக்குடி நீதிமன்றத்தில் கொடுத்த மனுவின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி முத்துப்பட்டணம் லோகாம்பாள் என்பவரது கட்டிடத்தில் 2006ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு 2017 வரை இயங்கிவந்த செல்போன் கோபுரம், அதற்கான டீசல் ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் அதன் உபகரணங்களை காணவில்லை இதனுடைய மதிப்பு ரூ19 லட்சத்து 52 ஆயிரத்து 697 .
இதேபோல் கம்பன் அருணாச்சலம் தெருவில 2003ஆம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த செல்போன் டவர் மற்றும் அதன் உபகரணங்களை காணவில்லை இதனுடைய மதிப்பு 17 லட்சத்து 72 ஆயிரத்து 425 என்று புகார் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைச்சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் குற்றவாளிகளை செல்போன் கோபுர பதிவுகள் மூலம் கண்டுபிடித்து வந்த போலீசார் செல்போன் கோபுரமே திருடு போனதை நினைத்து திகைத்துபோய் உள்ளனர்.
Related Tags :
Next Story