பிப்ரவரி 28-ல் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல்


பிப்ரவரி 28-ல் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2022 2:50 PM IST (Updated: 17 Feb 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி வருகை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.க. ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தின் முதல் பாகம் வருகிற பிப்.28 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளியாக உள்ள நிலையில் அந்த வெளியீட்டு விழாவில் சில முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தற்போது, இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி உள்பட வேறு சில கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story