கடலூர் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


கடலூர் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 17 Feb 2022 4:48 PM IST (Updated: 17 Feb 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடைபெறும் நாளான வருகிற 19-ந்தேதி (நாளை மறுதினம்) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் 18-ந்தேதி (நாளை) தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர, பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், 50 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் 18-ந்தேதியன்றும் விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.

Next Story