10 ஆண்டுகளாக தமிழகத்தை பாழாக்கிய அதிமுக, திமுகவை குறை கூறுகிறது : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


10 ஆண்டுகளாக தமிழகத்தை பாழாக்கிய அதிமுக, திமுகவை குறை கூறுகிறது : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Feb 2022 7:25 PM IST (Updated: 17 Feb 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார் .


தமிழகத்தில் 12 ஆயிரத்து 604 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.நகர்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல் -அமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார் .

இந்த பிரசாரத்தில் அவர் கூறியதாவது ;

நெல்லை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோயில்  தான் .1920ம் ஆண்டு நெல்லையில் தான் வகுப்பு வாரி உரிமை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

அதிமுக 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை கடந்த 9 மாதங்களில் திமுக செய்துள்ளது.எடப்பாடி பழனிசாமி திமுகவின் சாதனைகளை மக்களிடம் கேட்டு பார்க்கவேண்டும்.
 
திமுக ஆட்சியில் அமர்ந்தபோது இந்திய முழுவதும் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு இருந்தது .திமுக அரசு பெட்ரோல் ,டீசல் ,மீதான வரியை குறைத்தது.

 10 ஆண்டுகளில் தமிழகத்தை பாழாக்கிய அதிமுக ,திமுகவை  குறை கூறுகிறது இவ்வாறு அவர் கூறினார் 


Next Story