மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை
டீசல் மானியம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
டீசல் மானியம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
மானியம் குறைப்பு
புதுவை மீனவர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.11 வழங்கப்பட்டு வந்தது. இந்த மானியத்தில் தற்போது ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.1 மட்டுமே வழங்கப்படும் என்று மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் மானிய குறைப்பால் மேலும் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முற்றுகை போராட்டம்
டீசல் மானியத்தை குறைக்கக்கூடாது என்று வலியுறுத்தி இன்று படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இந்த பிரச்சினை தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் பேச்சுவார்த்தை நடத்த மீனவர்களை அழைத்தார்.
ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துவிட்டனர். அமைச்சர் தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் முதலியார்பேட்டை போலீசாரும் குவிக்கப்பட்டனர். அவர்களும் மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மீனவர்கள் அதை ஏற்காமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சுருக்கு வலை
இதற்கிடையே லாரி ஒன்று சுருக்கு வலையை ஏற்றிக்கொண்டு துறைமுகத்துக்கு வந்தது. இதனை கண்ட கடலோர காவல்படை போலீசார் சுருக்கு வலைக்கு அனுமதியில்லை என்று கூறி அதை இறக்கவிடாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்.
Related Tags :
Next Story