புதுச்சேரி கடலூர் சாலையில் விபத்து அதிகரிப்பு


புதுச்சேரி  கடலூர் சாலையில் விபத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 11:32 PM IST (Updated: 17 Feb 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி-கடலூர் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதுச்சேரி-கடலூர் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய சாலை
சென்னையில் இருந்து கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு புதுச்சேரி வழியாகத்தான் ஏராளமான பஸ்கள், வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
மேலும் சாலையோரம் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் சாலை வளைவுகள் குறித்த எச்சரிக்கை பலகைகள், எல்லை கோடுகள் இல்லை. 
விபத்துகள் அதிகரிப்பு
இதுபோன்ற குறைகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.
இந்த வழியாகத்தான் தினந்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செல்கின்றனர். ஆனால் அவர்கள் சேதமடைந்த சாலை மற்றும் மின்விளக்கு உள்ளிட்டவைகளை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து போலீஸ் மற்றும் மின் துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி பழுதடைந்துள்ள சாலையோர மின் விளக்குகளை சரிசெய்யவேண்டும், சாலையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story