மார்ச் 29-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் விமான சேவை...!


மார்ச் 29-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் விமான சேவை...!
x
தினத்தந்தி 18 Feb 2022 10:52 AM IST (Updated: 18 Feb 2022 10:52 AM IST)
t-max-icont-min-icon

மார்ச் 29-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருகிற மார்ச் 29-ந் தேதி முதல் திருப்பதிக்கு சேவையை தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. 

இந்த விமான சேவைக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது. திருச்சியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story