வேலுமணி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது -போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்


வேலுமணி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது -போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்
x
தினத்தந்தி 18 Feb 2022 3:39 PM IST (Updated: 18 Feb 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.

கோவை,

கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறியும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்தது. போராட்டத்தை கைவிட மறுத்ததையடுத்து போலீசார் வேலுமணி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்களை கைது செய்தனர். அப்போது 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நிகழ்விடத்தில் இருந்ததால் போலீசாருக்கும் - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தரையில் படுத்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர். 

Next Story