தனியார் மருத்துவமனை செவிலியர் பலாத்காரம்


தனியார் மருத்துவமனை செவிலியர் பலாத்காரம்
x
தினத்தந்தி 18 Feb 2022 11:55 PM IST (Updated: 18 Feb 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனியார் மருத்துவமனை செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாகூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனியார் மருத்துவமனை செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செவிலியர்
பாகூர் அருகே உள்ள மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சந்தோஷ் (வயது 27). பாகூர் கிராம பகுதியை சேர்ந்த 26 வயது பெண், தனியார் மருத்துவமனை செவிலியர். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு சந்தோஷ் தனக்கு சொந்தமான காலி வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
இவ்வாறு பலமுறை அந்த பெண்ணிடம் சந்தோஷ் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது செல்போனில் அந்த பெண்ணை சந்தோஷ் நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.
திருமண ஏற்பாடு
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அந்த பெண், சந்தோஷிடம் பேசி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் சந்தோஷ் மறுத்து விட்டார். 
இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயம் செய்து, கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதை அறிந்த சந்தோஷ், மீண்டும் அந்த பெண்ணை சந்தித்து, திருமணத்தை ஏதாவது காரணம் சொல்லி நிறுத்தி விடு, நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கெஞ்சியதாக தெரிகிறது.
கொலை மிரட்டல்
இதை நம்பிஅந்த பெண், தனது திருமண ஏற்பாட்டை நிறுத்தியதுடன் சந்தோஷை தனது வீட்டுக்கு வந்து பேசுமாறு கூறினார். ஆனால் அதன்பிறகும் அவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி, சந்தோஷ் மீண்டும் அந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தார். திருமணம் செய்து கொள்ளாமல் வரமாட்டேன் என அந்த பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அந்த பெண்ணை தரக்குறைவாக பேசி, நீ வரவில்லை என்றால் உனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அசிங்கப்படுத்துவேன். இதனை வெளியில் சொன்னால், உயிருடன் எரித்துக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். 
காதலனுக்கு வலைவீச்சு
இதனால், மனமுடைந்த அந்த பெண் கடந்த மாதம் 16-ந் தேதி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று  காப்பாற்றினர்.
காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன் சந்தோஷ் மீது  அந்த பெண் கரையாம்புத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து சந்தோசை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story