தனியார் வங்கி ஊழியர், என்ஜினீயர் கைது
மசாஜ் சென்டரில் சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் வங்கி ஊழியர், என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
மசாஜ் சென்டரில் சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் வங்கி ஊழியர், என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
விபசாரம்
புதுவையில் மசாஜ் சென்டர், அழகுநிலையம் என்ற பெயரில் விபசாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக போலீசார் மசாஜ் சென்டர், அழகுநிலையங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் சிறுமியை விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் மீதமுள்ள 24 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்தநிலையில் முதலியார்பேட்டையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜ்குமார் (வயது 27), மூலக்குளத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுரேஷ் (34) ஆகிய 2 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story